சரியான நேரத்திற்கு பேருந்தை இயக்காததை தட்டி கேட்ட பெண்.. ஓட்டுநரின் அதிரடி செயலால் பரபரப்பு.!

சரியான நேரத்திற்கு பேருந்தை இயக்காததை தட்டி கேட்ட பெண்.. ஓட்டுநரின் அதிரடி செயலால் பரபரப்பு.!


chennai-women-questioned-driver

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்-முருமதா தம்பதியினர். இவர்கள் இருவரும் அதிகாலையில் பாரிஸ் செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு வந்துள்ளனர். 

அப்போது பேருந்தானது பணிமனையிலிருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 5.30 மணி ஆகியும் பேருந்து இயக்கப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து பேருந்து ஓட்டுனரிடம் முருமதா கேட்டுள்ளார்.

அதற்கு பேருந்து ஓட்டுனர் ஒருமையில் பேசியதில் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுனர் செந்தில் மற்றும் முருமதாவை பேருந்திலிருந்து கீழே தள்ளியுள்ளார்‌. அதில் முருமதா மயங்கி விழுந்துள்ளார்.

chennai

இதனை கண்டித்து பொது மக்கள் பணிமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டுனரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.