13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
கடன் தொகையை கேட்டு வங்கி அதிகாரிகள் அடாவடி செயல்? "போனை ஹேக் பண்ணிட்டாங்க" குமுறும் பெண்மணி.!
சென்னையை சேர்ந்தவர் அனிதா. இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக (Event Organizer) வேலை பார்த்து வருகிறார். கடந்த ஓராண்டாக இவர் உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கிடைத்த சிறிய அளவிலான வருமானத்தை வைத்து குடும்பத்தை நகர்த்தி வந்துள்ளார். தனியார் வங்கியிலும் இவர் கடன் வாங்கி இருந்ததாக தெரியவருகிறது.
வேலைக்கு சென்றபோது கடனுக்கான மாத தவணையை தவறாமல் செலுத்தி வந்த பெண்மணி, உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்த காரணத்தால் கடனை செலுத்த வழியில்லை. தவணையை கேட்டுப்பார்த்த வங்கி நிர்வாகம், ஒருகட்டத்தில் அவரின் செல்போனை ஹேக்கிங் செய்து அவரின் உறவினர்கள், நண்பர்கள் என அவரின் காண்டாக்ட்டில் உள்ள அனைவர்க்கும் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.
கடனை வசூலிக்க புது டெக்னீக்?
ரூ.2 இலட்சம் கடனுக்காக ரூ.25 இலட்சம் தரவேண்டும் என கேட்டு மிரட்டி இருக்கின்றனர். மேலும், அவர் குடியிருந்த வீட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று ரூ.30 இலட்சம் வரை அனிதா ஏமாற்றியதாகவும் புகைப்படத்தை காண்பித்து கூறி இருக்கின்றனர். அனிதாவுக்கு சம்பந்தமான ஒவ்வொருவரிடமும் அவரின் புகைப்படத்தை காண்பித்து வங்கி அதிகாரிகள் அடாவடி செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை: 13 வயது சிறுமி பலாத்காரம்; காதல் பெயரை சொல்லி இளைஞர் பகீர் செயல்.!
மாதம் ரூ.18,999 தவணை செலுத்த வேண்டும் என்ற நிலையில், 2 ஆண்டுகளாக அதனை செலுத்தி இருக்கிறார். 3 ஆண்டுகள் தவணையை செலுத்தவேண்டும் என்ற நிலையில், ரூ.6 இலட்சத்தில் ரூ.3 இலட்சம் வரை தவணை நிறைவாகியுள்ளது. எஞ்சிய தொகையை மாத தவணையில் செலுத்த காலதாமதம் ஆனதால், வங்கி நிர்வாகம் இவ்வாறான சர்ச்சை செயலை மேற்கொண்டதாக அனிதா தெரிவித்து குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சென்னை எம்.ஜி.ஆர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் இரயில் முன்பதிவு தொடக்கம்.! விபரம் உள்ளே.!