தமிழகம்

கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்து வந்த ரகசிய வேலை.. நள்ளிரவில் வந்த மர்ம நபரால் வெளியான திடுக்கிடும் தகவல்.!

Summary:

chennai-wifes-sex-business-came-to-light-after-robbery

சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் குமாரின் வீட்டிற்குள் வந்து கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து குமார் செங்குன்றம் போலீசில் நிலையில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயதான ரகு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது லாரி ஓட்டுநரான குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி வீட்டின் மாடியில் உள்ள கூரை வீட்டில் பாலியல் தொழில் செய்து அதிக பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் வீட்டில் அதிக பணம் இருப்பதை தெரிந்து கொண்ட ரகு தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும் குமாரின் மனைவி சட்டவிரோத செயலில் ஈடுபடுவதால், போலீசில் புகார் அளிக்க மாட்டார் என நினைத்து செய்ததாகவும், இதுகுறித்து எதுவும் தெரியாத குமார் போலீசில் புகார் அளித்ததால் தாங்கள் சிக்கிக்கொண்டதாகவும் ரகு கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement