தமிழகம்

தங்கம் வாங்க போறிங்களா... கொஞ்சம் பொறுங்க.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Summary:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்துள்ளநிலையில் சவரன் 38 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்துள்ளநிலையில் சவரன் 38 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக தங்கம் என்றாலே அதன் விலை ஏறுவதும், இறங்குவதும் வழக்கமான ஒன்று. அதற்கு காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்தே தங்கத்தின் விலை நிர்ணையிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.216 உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,788-க்கும், ஒரு சவரன் 38 ஆயிரத்து 304 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலையை பொருவத்தவரை நேற்று மாலை நிலவரப்படி ரூ.67.10-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி இன்று 10 காசுகள் உயர்ந்து ரூ.67.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Advertisement