அருப்புக்கோட்டைக்கு புக் செய்தால் மதுரையில் டிராப்.. RP டிராவல்ஸ் நிறுவனத்தின் அலட்சியம்.. கொந்தளித்த பயணிகள்..!

அருப்புக்கோட்டைக்கு புக் செய்தால் மதுரையில் டிராப்.. RP டிராவல்ஸ் நிறுவனத்தின் அலட்சியம்.. கொந்தளித்த பயணிகள்..!


chennai-to-aruppukkottai-madurai-drop-passengers-angry

சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உட்பட பல நகரங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகளும் அணிவகுத்து செல்லும். 

இந்த நிலையில், சென்னையில் இருந்து அருப்புக்கோட்டை செல்வதற்கு RedBus இணையத்தளம் மூலமாக RP Travels நிறுவனத்தில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த பேருந்து மதுரைக்கு இன்று காலை வந்துள்ளது. 

அப்போது, பேருந்தின் நிர்வாகிகள் எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி, மாற்று பேருந்தையும் ஏற்படுத்திக்கொடுக்காமல் அதனை ரத்து செய்து அறிவித்தனர். மாற்று பேருந்து எப்போது வரும் என்று அருப்புக்கோட்டை செல்லவிருந்த பயணிகள் கேட்டதற்கு பதில் இல்லை. 

மணிக்கணக்கில் மாற்று பேருந்து வரும் என்று பயணிகளை அலைக்கழிக்க, பேருந்தில் பயணித்த பெண்மணி வாக்குவாதம் செய்ய தொடங்கியபின்னரும் அலட்சிய பதிலே வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

பொதுவாக அரசு பேருந்து நேரம் கூடுதலாக எடுத்துக்கொண்டாலும் தனது இலக்கை நோக்கி எவ்வித பிரச்சனையும் இன்றி பயணம் செய்யும். இடையில் தடை இருந்தாலும் சிறிது நேரத்தில் மாற்றுப்பேருந்து ஏற்பாடு செய்து தரப்படும். ஆனால், தனியார் பேருந்துகளோ கட்டணத்தில் குறியாய் இருந்து செயல்படும். இதில் மேற்க்கூறிய சம்பவம் விதிவிலக்கல்ல.