தமிழகம்

சென்னையில் தனது கோர முகத்தை காட்டும் கொரோனா.!ஒரே தெருவில் 40 பேர் பாதிப்பு..! எந்த பகுதியில் தெரியுமா?

Summary:

Chennai thiruvalikani one of the street more affected by the corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நோயானது தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளது.

அதிலும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் மட்டும் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சம்பவம் சென்னை மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் சென்னையில் கொரோனாவால் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது எந்த வித அறிகுறியும் இன்றி 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு வருவதால் அரசு மற்றும் சுகாதார துறையால் மக்களை கண்காணிப்பதில் சற்று சவாலாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் திருவல்லிக்கேணி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் அந்த தெருவில் தான் அதிகப்படியாக 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement