வேலைக்கு வந்த இடத்தில்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் திடுக் சம்பவம்.!



Chennai Shock 16-Year-Old Girl Assaulted by Two Men at Workplace, One Arrested

பிழைப்புக்காக வேலைக்கு வந்த இடத்தில், 16 வயது சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 வயது சிறுமி:

Chennai Crime News Today: சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதே நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ரூபன் என்பவர் பணியாற்றி இருக்கிறார். இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பின் அடிப்படையில் பழகி வந்துள்ளனர். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

sexual abuse

நட்பாக பேசி அழைத்துச் சென்று கொடுமை:

16 Year Old Girl Assaulted: இதனிடையே, ரூபன் சம்பவத்தன்று சிறுமியை கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து, இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாக மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி நடந்ததை வெளியே கூற இயலாமல் தவித்துள்ளார். ஒருசில நாட்கள் கடந்தபின், ரூபன் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் தனது நண்பரான நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஆலன் ஹுசைன் என்பவரிடம் சிறுமியை வன்கொடுமை செய்தது தொடர்பாக கூறி இருக்கிறார். 

sexual abuse

மிரட்டி பலாத்காரம்:

மேலும், நீ எனது நண்பருடனும் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் சிறுமியை மிரட்டி இருக்கிறார். இந்த விஷயத்துக்கு உடன்படாத பட்சத்தில் பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுத்த வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி இருக்கிறார். இவ்வாறாக சிறுமியை மிரட்டி இரண்டு பேரும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். தொடர் மிரட்டல்கள் அதிகரித்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரூபனை போக்ஸோ வழக்கில் கைது செய்தனர். மேலும், ஹுசைனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!