#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு உள்ளே.!

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு உள்ளே.!



chennai-rmc-update-1-oct-2023

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, ஒன்றாம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோவை, திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இரண்டாம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

அதிகபட்ச வெப்ப நிலையாக 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாலை 7 மணிவரை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களில் பட்டியலை வானிலை ஆய்வு மாயம் வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் கனமழையும், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.