மேற்குத்திசைக்காற்றால் தமிழ்நாட்டில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

மேற்குத்திசைக்காற்றால் தமிழ்நாட்டில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



CHennai RMC Report 23 June 2023

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக 23ம் தேதியான இன்று மற்றும் 24ம் தேதியான நாளை தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

25ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் அடுத்த 48 மணிநேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படலாம். 

நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகும். 

tamilnadu

மீனவர்களுக்காக எச்சரிக்கையாக இன்று & நாளை வங்கக்கடல் பகுதியில் மன்னர் வளைகுடா, தெந்தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல், ஆந்திர கடலோரப்பகுதி, அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசும். 

அரபிக்கடலை பொறுத்தமட்டில் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் இலட்சத்தீவு பகுதி, கேரளா-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.