தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai RMC Announce Rain for 2 Days 

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். ஒருசில இடங்களில் அதிகாலை லேசான பனிமூட்டம் இன்று மற்றும் நாளை காணப்படும். 

12ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். 13 & 14ம் தேதிகளில் தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டம், காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்யலாம். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். 

chennai

15 & 16ம் தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 23 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதியில் லேசான பனிமூட்டம் ஏற்படும். 

அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். இன்று குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்டுகிறது" என தெரிவிக்ப்பட்டுள்ளது.