முடியை வெட்டிவரச்சொன்ன தலைமை ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கிய மாணவர்கள்.!Chennai Pulianthope School Head Master Attacked by Students

சிகையை மாணவர் போல அலங்கரித்து வருமாறு கூறிய தலைமை ஆசிரியரை மாணவர்கள் தாக்கிய பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் உள்ள புளியந்தோப்பு, அம்மை அம்மாள் தெருவில் சென்னை உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியராக முஸ்தர்ஜான் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர் பாடம் எடுத்துள்ளார். 

அப்போது, வகுப்பறையில் இருந்த 2 மாணவர்களின் தலைமுடி அதிகமாக இருந்த நிலையில், அதனைகவனித்த தலைமை ஆசிரியர் கண்டித்து இருக்கிறார். மேலும், படிக்கும் போதே ரவுடி போல சிகையலங்காரம் செய்தால் எப்படி?. நாளை முடியை வெட்டிவிட்டு பள்ளிக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார். 

chennaiஇதனால் ஆத்திரமடைந்த 2 மாணவர்களும் தலைமை ஆசிரியரை தாக்கவே, அவர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். 

அப்போது, தலைமை ஆசிரியர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அவர்களை கண்டித்து அறிவுரை கூறுமாறு காவல் துறையினர் மற்றும் பெற்றோரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் மாணவர்களை கண்டித்து எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.