காதல் தற்கொலை செய்த விரக்தியில், இளைஞர் தற்கொலை.. சென்னையில் கண்ணீர் சோகம்.!

காதல் தற்கொலை செய்த விரக்தியில், இளைஞர் தற்கொலை.. சென்னையில் கண்ணீர் சோகம்.!


Chennai Puduvannarpet Love Boy Suicide His Love Girl Already Suicide Died Feeling Guilty

உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதலி தற்கொலை செய்துகொண்டதால், மனமுடைந்த காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை, புச்சம்மாள் தெருவில் வசித்து வருபவர் எழில் (வயது 26). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு போன்ற காரணத்தால், உணவகத்தில் வருமானம் குறைந்துள்ளது. இதனால் உணவகம் ஒருகட்டத்தில் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புச்சம்மாள் தெருவில் வசித்து வரும் கல்லூரி மாணவியை எழில் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் உறவினராக இருந்ததால், பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. கல்லூரி மாணவி எழிலுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்த நிலையில், இதனை கவனித்த பெற்றோர் மகளை கண்டித்து இருக்கின்றனர். மேலும், படித்து முடித்ததும் காதல், திருமணம் குறித்து பேசலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

chennai

காதலனுடன் பேச இயலாமல் போனதால் மனமுடைந்து காணப்பட்ட கல்லூரி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதலியின் தற்கொலையால் எழிலும் மன விரக்தியுடன் காணப்படவே, அவரை நண்பர்கள் ஆறுதல் கூறி மனதை தேற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அவை தோல்வியில் தான் இறுதியில் முடிந்துள்ளது. 

காதலியின் மறைவால் விரக்தியின் உச்சத்தில் காணப்பட்ட எழில், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர், எழிலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.