உயிரை துச்சமென நினைத்தார்..! கொரோனாவில் இருந்து மீண்டு 2வது முறை கொரோனா தாக்கி பலியான சென்னை நர்ஸ்..!

தமிழகத்தில் கொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 22 ஆண்டுகளாக செவிலியர் பணியாற்றியவர் 54 வயதான தங்கலக்ஷ்மி. கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கிவந்த இவர் சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை நடைபெற்றநிலையில் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் வீட்டில் முடங்காமல் குணமான பிறகு மீண்டும் கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட தொடங்கினார் தங்கலக்ஷ்மி.
இந்நிலையில் இவருக்கு மீண்டும் தொற்று உறுதியாகி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகமோசமனாத்தை அடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் பலனின்றி தங்கலக்ஷ்மி உயிரிழந்தார்.
உயிரிழந்த செவிலியர் தங்கலக்ஷ்மியின் கணவரும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.