ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி.. சாமர்த்தியமாக செயல்பட்டதால் தப்பித்த பயணிகள்..! 

ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி.. சாமர்த்தியமாக செயல்பட்டதால் தப்பித்த பயணிகள்..! 



Chennai MTC bus driver saves passenger life

சென்னையில் உள்ள பொன்னேரி நகரில் இருந்து பழவேற்காடு க்கு தடம் எண் 28 என்ற சென்னை மாநகர அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த வழித்தடத்தில் பேருந்து ஓட்டுநராக பயணியாற்றியவர் கோலப்பன். 

இவர் நேற்று இரவு 10 மணியளவில் பொன்னேரியில் இருந்து பழவேற்காடுக்கு பேருந்தை இயக்கி உள்ளார். பின்னர் அங்கேயே உறங்கிவிட்டு, இன்று அதிகாலை 4 மணியளவில் பேருந்தை பொன்னேரியில் இருந்து பழவேற்காடு நோக்கி இயக்கியுள்ளார். அப்போது, பேருந்து பாரதி நகர் அருகே சென்றுள்ளது‌. 

இந்நிலையில், ஓட்டுனர் கோலப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெஞ்சை பிடித்தபடி பேருந்தை சாலையோரம் நிறுத்தியுள்ளார். சுதாரித்த பயணிகள் மற்றும் நடத்துனர் ஓட்டுனரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்த மருத்துவர்கள் செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஓட்டுநர் கோலப்பனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும்‌. சென்னையில் தங்கியிருந்து அவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.