தமிழகம்

எப்படித்தான் இறந்தார் இளம் பெண் மருத்துவர் பிரதீபா.? கொரோனாவும் இல்லை.! மர்மத்தை ஏற்படுத்தியுள்ள பிரேதபரிசோதனை முடிவு.!

Summary:

Chennai medical college student pradeepa death case

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர் 22 வயதான மருத்துவ மாணவி பிரதீபா. கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த பிரதீபா கொரோனா சிகிச்சை நடைபெற்றுவரும் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் பணியாற்றிவந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வார்டில் பணியாற்றுவதால் பிரதீபா வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் கல்லூரியின் பெண்கள் விடுதியில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியிருந்த இவர் நேற்று காலை பூட்டிய அறைக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.

கொரோனா வார்டில் பணிபுரிந்ததால் கொரோனா பாதிப்பு இருக்குமோ என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிரதீபாவுக்கு கொரோனா தாக்குதல் இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல் நாள் இரவு பெற்றோருக்கு போன் செய்து மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் பிரதீபா.

ஒருவேலை கொலை அல்லது, தற்கொலையாக இருக்குமோ என்ற முதற்கட்ட பிரேத பரிசோதனை ஆய்வில், பிரதீபாவின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்பதால் கொலைசெய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதேநேரம், விஷம் அறிந்தியோ, தூக்கு போட்டோ பிரதீபா தற்கொலை செய்துகொண்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

இதனால் பிரதீபா எப்படி மரணம் அடைந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. எனவே, முழு பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே பிரதீபா எப்படி உயிர் இழந்தார் என்பது தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.


Advertisement