எங்களை பார்க்க யாருமே இல்லை - தந்தை, மகன் எடுத்த விபரீத முடிவால் சோகம்.. கடிதத்தில் பரிதாப தகவல்.!

எங்களை பார்க்க யாருமே இல்லை - தந்தை, மகன் எடுத்த விபரீத முடிவால் சோகம்.. கடிதத்தில் பரிதாப தகவல்.!



Chennai Koyambedu Father and Son Suicide due to Feeling Alone

சென்னையில் உள்ள கோயம்பேடு, சேமாத்தம்மன் நகரில் வசித்து வருபவர் கங்காதரன் (வயது 77). இவரின் மகன் ஞானம் (வயது 53). இந்நிலையில், இன்று காலை இவர்களின் வீட்டு கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கங்காதரனின் மகள் சுமதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளார். 

அப்போது, தந்தை மற்றும் சகோதரன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த சமிதி, இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த கோயம்பேடு காவல் துறையினர், கங்காதரன் மற்றும் ஞானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கையில், "கங்காதரனின் மனைவி கடந்த சில வருடத்திற்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். கங்காதரன் இருதய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரின் மகன் ஞானம் சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

chennai

கடந்த 4 மாதத்திற்கு முன்னதாக ஞானம் இருசக்கர வாகன விபத்தில் சிக்கியதால் அவரின் கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் தந்தை மற்றும் மகன் கவனிக்க ஆட்கள் இன்றி தவித்து வந்த நிலையில், மனஉளைச்சலில் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இவர்கள் எழுதி வைத்த கடிதத்திலும், தங்களை கவனிக்க ஆட்கள் இல்லாததால் மனதுடைந்து தற்கொலை செய்கிறோம். எங்களின் முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.