தூங்குனா அந்த மாதிரி கனவா வருது.. திருமணம் ஆன 5 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை.! சோகத்தில் கணவன்.!

தூங்குனா அந்த மாதிரி கனவா வருது.. திருமணம் ஆன 5 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை.! சோகத்தில் கணவன்.!


Chennai Kodungaiyur New Married Girl Abirami Suicide

சென்னையில் உள்ள கொடுங்கையூர், கண்ணதாசன் நகர் 3 ஆவது வீதியை சேர்ந்தவர் அபிராமி (வயது 27). ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர்கள் இருவருக்கும் கடந்த 23 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, ஓட்டேரி வி.வி. கோவில் பகுதியில் உள்ள அக்கா மோகன பிரியாவின் வீட்டிற்கு, அபிராமி தனது கணவர் சதீஷுடன் விருந்துக்கு சென்றுள்ளார். 

வீட்டில் இருந்த அபிராமி நீண்ட நேரமாக படுக்கையறை கதவை திறக்காமல் இருந்த நிலையில், சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்க்கையில் அபிராமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மோகன பிரியா, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

chennai

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அபிராமி உறங்கும் போது, ஆபத்தான கனவுகளை கண்டு வந்துள்ளார். 

இதனால் பயத்திலேயே பல நாட்கள் உறங்காமல் இருந்து வந்த நிலையில், மன விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்றும் தெரியவருகிறது. திருமணம் முடிந்து 5 நாட்களில் பெண் தற்கொலை செய்ததால், ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.