சென்னை ஐ.டி பார்க்கில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்; கைபிடித்து காப்பாற்றிய பெண்மணி.. வைரலாகும் வீடியோ உள்ளே.!

சென்னை ஐ.டி பார்க்கில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்; கைபிடித்து காப்பாற்றிய பெண்மணி.. வைரலாகும் வீடியோ உள்ளே.!


Chennai IT Sector Youngster Suicide Attempt Women Saved Life 

 

சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில், சம்பவத்தன்று அங்கு வேலை பார்த்துவரும் ஊழியர் 2வது மாடியில் இருந்து தற்கொலை செய்வதாக அங்கிருந்தவர்களை மிரட்டி இருக்கிறார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் செய்வதறியாது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த, பெண்மணி ஒருவர் துரிதமாக செயல்பட்டு இளைஞரின் கைகளை பற்றிக்கொண்டார். 

chennai

உடனடியாக அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு இளைஞரை பத்திரமாக மீட்டனர். அவரின் நடவடிக்கையால் இளைஞருக்கு வேலை பறிபோயிருக்கலாம் என தெரியவருகிறது. 

இந்த விடியோவை பதிவு செய்த நபர்கள், முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததைத்தொடர்ந்து சம்பவம் தெரியவந்துள்ளது. அந்த விடீயோவின் பின்னணியில், "வேலையை விட உயிர் முக்கியம். 2 வது மாடியில் இருந்து குதித்தால் கை-காலை உடைத்துக்கொண்டு கஷ்டப்படப்போகிறான்" என கூறுகிறார்கள்.