#Breaking: அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரத்தில் வெளிவரப்போகும் உண்மை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!



Chennai Court Permit Investigation on Ganasekaran 

 

சென்னையில் உள்ள கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 19 வயதுடைய கன்னியாகுமரியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். காதலருடன் தனிமையில் இருந்த மாணவியை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்டவர், தான் அழைக்கும்போது வந்து ஒருவருடன் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் மிரட்டி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வழக்கு, தற்போது நீதிமன்றத்தின் கண்காணிப்பின் பேரில், சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரணை நடத்தப்படுகிறது.

நீதிமன்ற காவலுக்கு அனுமதி

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், ஞானசேகரனிடம் விசாரணை செய்ய 7 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "எந்த குற்றவாளியையும் தப்பிக்க விடமாட்டோம்" - உதயநிதி ஸ்டாலின் உறுதி.!

Anna university

வெளிவரப்போகும் உண்மைகள்

வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஸ்மார்ட்போனில் உள்ள வீடியோ விடியோக்கள், வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பேரில் விசாரணையை முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி சுப்பிரமணியம் ஞானசேகரனிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கி இருக்கிறார். 

ஸ்மார்ட்போனில் பல ஆபாச வீடியோ இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட நபர்கள் யார்? தொலைபேசியில் அழைத்த நபர் யார்? என எப்.ஐ.ஆர்-ல் இடம்பெற்ற விஷயங்கள் குறித்தும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என்பதால், ஞானசேகரனின் வழக்கு இனிதான் சூடுபிடிக்க போகிறது எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: திராவிட மாடல் அரசின் மீது நம்பிக்கை இல்லை - தமிழிசை ஆவேசம்.!