தமிழகம்

சென்னையில் இந்த 6 பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..!

Summary:

Chennai corona affected people

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது என்றால் அது தலைநகரான சென்னை பகுதியில் தான். இதுவரை சென்னையில் மொத்தமாக 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மொத்தமாக சென்னையில் உள்ள 13 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மேலும் சென்னையை சேர்ந்த இந்த 6 மண்டல மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதில் சென்னையில் அதிகப்பட்சமாக ராயப்புரத்தில் 46, திருவிக நகரில் 25,அண்ணா நகரில் 22, கோடம்பாக்கத்தில் 20, தண்டையார்பேட்டையில் 14, தேனாம்பேட்டையில் 12 பேர் என இந்த 6 மண்டலங்களில் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பெருங்குடியில் 6, வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூரில் தலா 4, மாதவரத்தில் 3, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் மட்டும் தான் இதுவரை எந்த ஒரு பாதிப்பு இல்லை. 


Advertisement