சென்னை தோன்றி இன்றுடன் எத்தனை வருடங்கள் ஆகிறது தெரியுமா?



Chennai birth year

மெட்ராஸ் தினம் ஒவொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதலில் மெட்ராஸ் என்றும் தற்போது சென்னை எனவும் அழைக்கப்படுகிறது. சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்த பகுதி பின்னாளில் சென்னை மாநகரமாக உருவெடுத்தது.

Madras day

பரந்து விரிந்திருந்த அந்த மணல் திட்டு பகுதியை அதன் உரிமையாளர்களான சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் ஆகியோரிடம் இருந்து, 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி, பிரான்சிஸ் டே விலைக்கு வாங்கினார். அன்றைய தினமே சென்னையின் உதய நாளாக கணக்கிடப்படுகிறது.

இன்றுடன் சென்னை உருவாகி 380 ஆண்டுகள் ஆகிறது.