செம மாஸ்... சும்மா தெறிக்க விடும் வாத்தி டிரைலர்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!
காதல் தோல்வி.. மனமுடைந்த இளைஞர் கடலில் பாய்ந்து தற்கொலை முயற்சி.. உயிர்கொடுத்த அதிகாரிகள்.!
காதல் தோல்வி.. மனமுடைந்த இளைஞர் கடலில் பாய்ந்து தற்கொலை முயற்சி.. உயிர்கொடுத்த அதிகாரிகள்.!

பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்தவர் பத்திரமாக காப்பாற்றப்பட்டார்.
சென்னையில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரையில், காவல் அதிகாரிகள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, கடற்கரையோரம் இருந்த நபர் திடீரென கடலில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனைக்கண்ட காவல் துறையினர் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளான சபின் மற்றும் ராஜா ஆகியோர் இளைஞரை காப்பாற்றி இருக்கின்றனர்.
விசாரணையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி பகுதியை சார்ந்த வெங்கடேஸ்வரா ராவ் என்பவரது மகன் ரேலங்கி பனீந்தகுமார் (வயது 30) என்பதும், சென்னையில் வேலை செய்து வரும் பெண்ணை காதலித்து வந்த நிலையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்ய முயற்சித்தும் தெரியவந்துள்ளது.