#Breaking: பிரியாணிக்காக ஞானசேகரனிடம் தொடர்பில் இருந்த காவலர்கள்? - விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!



chennai-anna-university-girl-rape-case-update

 

ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்ததாக 6 காவலர்களிடம் விசாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 19 வயது கல்லூரி மாணவி, காதலருடன் தனிமையில் இருந்தபோது, அங்கு வந்த ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: மர்ம உறுப்பை தடவி.. பெண்ணிடம் அத்து மீறிய கயவன்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மாயம்.!

6 காவலர்களுக்கு தொடர்பு

இந்நிலையில், ஞானசேகரனின் ஸ்மார்ட்போன் பதிவுகளின்படி, அடையார் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 6 பேர், ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் ஞானசேகரனுடன் எந்த விஷயத்தில் இணைந்து இருந்தனர்? என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணையை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

chennai

ஓசி பிரியாணி

கடந்த 6 மாதமாக எடுக்கப்பட்ட விபரங்களின் பேரில், 6 அடையார் காவல் நிலைய அதிகாரிகள் வழங்கி சிக்கி இருக்கின்றனர். மேலும், இவர்கள் 6 பேரிடம் நடந்த விசாரணையில், காந்தி நகர் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தபோது, பணம் இல்லாமல் இலவசமாக பிரியாணி வாங்க தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் அழைப்புகளில் என்னென்ன தகவல் பகிரப்பட்டுள்ளன? வாட்ஸப்பில் ஏதேனும் அனுப்பி இருக்கின்றனரா? எனவும் விசாரணை நடைபெறுகிறது. 

குன்றத்தூரில் தொடங்கி அண்ணா பல்கலை., வரை பிரியாணி என்ற உணவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதையும் படிங்க: கணவரை பிரிந்த துணை நடிகையிடம் குடித்தனம் நடத்தி இலட்சங்களை சுருட்டிய காதல் சுகுமார்.. பெண் புகார்.!