தமிழகம்

காலரைத் தூக்கிவிட்டுட்டு கெத்தா சொல்ல இது வெறும் ஊரல்ல.! இது அதுக்கும் மேல...! அது தான் சென்னையின் தனி கெத்து!

Summary:

chennai 381 birthday

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில், எல்லோரையும் அரவணைக்கும் குணம் தமிழர்களுக்கு உண்டு. உபசரிப்பதில் தமிழர்களை மிஞ்சுவதற்கு ஆளில்லை. தமிழக்தில் எந்த மாவட்டத்திலும் தன்னால் வாழ முடியவில்லை என வெறுத்து பிழைப்பிற்காக தமிழக்தின் தலைநகரான சென்னைக்கு வந்து, வாழ்ந்து கோடீஸ்வரர்கள் ஆன பல நபர்கள் உள்ளனர். வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை என்று பலரும் பேசுவதுண்டு.

தற்போதைய, செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள சிறிய நிலப் பகுதியை, விஜயநகர நாயக்கர்களிடம் இருந்து, 1639 ஆக., 22ல் தான், கிழக்கிந்திய கம்பெனிக்காக, பிரான்சிஸ் டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் வாங்கினர்.அதன்பின், கோட்டை, அதைச் சுற்றிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. 

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாகாணத்தின் தலைநகர் மதராஸாக மாறியது. பின்பு 1969 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் பகுதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தலைநகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. 

சென்னையின் மிக முக்கியமான பெருமை எல்ஐசி கட்டிடம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம், அரசு அருங்காட்சியகம், சாந்தோம் தேவாலயம் போன்றவை சென்னை நகரத்துக்கு எடுத்துக் காட்டாக திகழ்கின்றன. அதுட்டுமின்றி  ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையாக கருதப்படும் சென்னை மெரீனா கடற்கரை உலக நாட்டு மக்களை ஈர்த்து வருகிறது.

எவ்வளவோ இயற்கை சீற்றங்களும் பாதிப்புக்குள்ளானாலும்(சுனாமி)(புயல்)(வெள்ளம்), மீண்டும் மீண்டும் மீண்டு எழுவதே சென்னை மாநகரின் தனி குணம். அப்படிப்பட்ட சென்னை இன்று தனது 381 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 


Advertisement