
chennai - mathavaram - rettary bridge - murder case - pshyco arrest
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் படுத்திருந்த கொளத்தூரைச் சேர்ந்த அஸ்லம்பாஷா என்பவர் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அடுத்த சில தினங்களில் அதே மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நேற்று மதுபோதையில் படுத்திருந்தார். அவரது மர்ம உறுப்பும் துண்டிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னை மாதவரம் பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த ஒரே மாதிரியான சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் நாராயணசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த சைக்கோ மனிதனை கண்டுபிடிக்க உதவுமாறு பொது மக்களுக்கும் போலீசார் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மானாமதுரை இரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்த சைக்கோ கொலையாளி முனுசாமியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
Advertisement
Advertisement