தமிழகம்

காலம் கடந்த கள்ளக்காதல்! 70 வயது தாத்தா காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க செய்துள்ள கொடுமை.!

Summary:

chennai - bad love - murder- husbend killed wife

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(70) இவருக்கு ஜோதி( 60)  என்ற மனைவியும் உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் நான்கு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக ராமகிருஷ்ணன் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக நாள்தோறும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வயது முதிர்வு காரணமாக பிரச்சனை உருவாகியிருக்கலாம் என்று சாதாரணமாக நினைத்துள்ளனர். அவரது மனைவிக்கும் புரியாத புதிராக இருந்துள்ளது.

இந்நிலையில் ஒரு நாள் ராமகிருஷ்ணனிற்கும் சென்னை சூரப்பட்டியில் உள்ள அவரது அண்ணன் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த கள்ள தொடர்பு முளைத்துள்ளதாகவும் தெரிகிறது.

இதனால் அத்திரமடைந்த ஜோதி, ராமகிருஷ்ணனிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்பொழுது அவர் ஆத்திரத்தில் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து ஜோதியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஜோதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோதி பலியானார். இதையடுத்து சூரப்பட்டியில் தன் அண்ணன் வீட்டில் கள்ளக்காதலி/ அண்ணியுடன் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.


Advertisement