தமிழகம்

சவக்கிடங்கில் சடலங்களை பதப்படுத்தும் ரசாயனத்தை 2 டன் மீன்களில் கலந்த வியாபாரிகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

Summary:

chemical in fish

சடலங்களை பதப்படுத்த பயன்படும் பார்மலின் ரசாயனம் கலந்த 2 டன் மீன்கள் மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுதும் மீன் சந்தைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை கரிமேடு சந்தையில் பிற மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் அங்குள்ள 72 கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 டன் மீன்கள், நண்டுகள் உள்ளிட்டவற்றில் பார்மலின் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 

உயிரிழந்த உடல்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்த பார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பார்மலின் ரசாயனத்தை மீன்கள் மீது பூசுவதால் மீன்கள் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் புத்தம் புதிதாக காட்சியளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பார்மலின் ரசாயனம் தடவிய மீன்களை சாப்பிட்டால் வாந்தி, தலைவலி, மந்த நிலை போன்றவை ஏற்படும் என்றும் கிட்னி பாதிப்பு கேன்சர் உள்ளிட்ட அபாயகரமான நோய்களுக்கும் வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.


Advertisement