வளிமண்டல சுழற்சி.! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வளிமண்டல சுழற்சி.! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!


Chance-of-rain-in-Tamil-Nadu-due-to-atmospheric-circulation.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வானது தற்போது வளிமண்டல சுழற்சியாக மாறியுள்ளது.

இதனால் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 

tamilnadu

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.