தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகளை மூட வாய்ப்பு.? நீதிமன்றத்தில் முறையீடு.!

Summary:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  இதனால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் எவ்வளவு வேகமாக அதிகரித்தாலும் தமிழ்நாட்டின் குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் அசராமல் கூட்டம் கூட்டமாக மது வாங்குவதற்கு அலைமோதுகின்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் முறையீடு செய்தார். அந்த முறையீட்டில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், நோய் பரவலை தடுப்பதற்கு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த முறையீடு இன்று விசாரணைக்கு வந்த போது, இதனை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகளை மூட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 


Advertisement