தமிழகம், கேரளாவில் தக்காளி காய்ச்சல் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை.!
தமிழகம், கேரளாவில் தக்காளி காய்ச்சல் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை.!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மக்கள் சில மாதங்களாக முழுவதும் விடுபட்டுள்ளனர். ஆங்காங்கே கொரோனாவின் தாக்கம் இருந்தாலும், மக்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் பெரிதளவில் விதிக்கப்படவில்லை.
முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைசர் உபயோகம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மூலமாக கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவுவதாக கண்டறியப்பட்ட நிலையில், அக்காய்ச்சல் மேலும் தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், உடலில் கொப்புளம் இருந்தால் அதனை தொடுதல் அல்லது சொரிதல் போன்றவை கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.