அரசியல் தமிழகம்

காவேரி மருத்துவமனை முன்பு திமுகவினர் மீது போலீஸ் தடியடி!. பரபரப்பாகும் காவேரி மருத்துவமனை!.

Summary:

காவேரி மருத்துவமனை முன்பு திமுகவினர் மீது போலீஸ் தடியடி!. பரபரப்பாகும் காவேரி மருத்துவமனை!.

கருணாநிதியின் உடல்நிலை கோளாறு காரணமாக இன்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியை காண பல அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் நலம் விசாரித்து வந்தனர். மேலும், கடந்த 4 நாட்களை ஒப்பிடும் போது, அவரின் உடல்நிலை நன்றாக உள்ளதாக பலரும் தெரிவித்தனர். தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையின்  4- ஆவது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் மருத்துவர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.  மேலும் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது.  

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிக்கை வெளியாக உள்ள நிலையில், கலைஞரின் துணைவியார் ராஜாதியம்மாளும், நடிகர் உதயநிதி ஸ்டாலினும் மருத்துவமனை வந்துள்ளனர்.

சற்றுமுன் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்களை சமாளிக்கமுடியாமல் போலீசார் தடியடி நடத்தினர். மருத்துவமனை முன்பு காவல்துறையினரால் தடுக்கமுடியாத அளவிற்கு கூட்டம் நிலவி வருகிறது.


Advertisement