தமிழகம்

காருக்குள் இருந்த 3 இளைஞர்கள்..! ஏற்கனவே விபத்துக்கு உள்ளன கார் மீது மோதி கார் மீதே கவிழ்ந்த லாரி..! அப்பளம் போல் நொறுங்கிய சம்பவம்.!

Summary:

Car lorry accident near Viralimalai 3 youths died on spot

விபத்துக்குள்ளான கார் மீது லாரி மோதி, கார் மீது லாரி கவிழ்ந்ததில் காரில் இருந்த மூன்று இளைஞர்கள் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியை சேர்ந்த மிதுன் கிஷோர் (23), பரத்(22) மற்றும் அரவிந்த்(23) ஆகிய மூன்று இளைஞர்களும் காரில் விராலிமலை நோக்கி சென்றுள்ளனர். வடக்காட்டுபட்டி என்னும் இடத்தில் கார் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று விபத்துக்குள்ளான கார் மீது மோதியுள்ளது, இதில் லாரி கார் மீது கவிழ்ந்த நிலையில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இந்த கோர சம்பவத்தில் காருக்குள் இருந்த மூன்று இளைஞர்களும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement