தமிழகம்

கதறும் இரண்டு குழந்தைகள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம். நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

Summary:

Car accident at ECR two died

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்மாறன். இவரது மனைவி ஸ்வேதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 7 பேர் திருமண நிகழ்ச்சிக்காக மாமல்லபுரம் சென்றுள்ளனர்.

கார் கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த ஜெனரேட்டர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் தமிழ்மாறன் மற்றும் மனைவி ஸ்வேதா இருவரும் சம்பவ இடத்திலையே உயிர் இழந்தனர். இரண்டு குழந்தைகள் உட்பட காயமடைந்த மற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துளனர்.


Advertisement