எஸ்கேப்பாகி ஓடிய கஞ்சா வியாபாரி; துரத்திய காவல்துறையினர்..! நடு ரோட்டில் நிகழ்ந்த துயரம்..!!

எஸ்கேப்பாகி ஓடிய கஞ்சா வியாபாரி; துரத்திய காவல்துறையினர்!,..நடு ரோட்டில் நிகழ்ந்த துயரம்..!


cannabis-smuggler-who-escaped-from-the-police-was-kille

கஞ்சா வழக்கில் கைதான நபர் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடியபோது எதிரே வந்த வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்துர் அருகே உள்ள விருதலைப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் அங்கு தன்னுடன் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இவர் கஞ்சாவை தேனி மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூம்பூர் காவல்துறையினர், பொன்னுசாமியை கைது செய்து இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, திடீரென பொன்னுசாமி இருசக்கர வாகனத்தில் இருந்து  குதித்து தப்பியோடினார். அப்போது எதிரே வந்த வாகனத்தை  கவனிக்காமல் ஓடியதால் எதிரே வந்த வாகனம் மோதியதில் பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து, கூம்பூர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.