தமிழகம் - ஆந்திரா இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்.. தமிழக அரசு அனுமதி.. மகிழ்ச்சியில் மக்கள்

தமிழகம் - ஆந்திரா இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்.. தமிழக அரசு அனுமதி.. மகிழ்ச்சியில் மக்கள்



bus-service-resume-from-tamil-nadu-to-andhra

தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பெரும்தொற்று காரணமாக போக்குவரத்துக்கு சேவை தற்காலிகமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கியுள்ள ஊரடங்கு தளர்வுகளை அடுத்து போக்குவரத்துக்கு சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு சேவை முடக்கம் ஒருசில மாநிலங்களுக்கு இடையே இன்றுவரை நீடிக்கிறது. தமிழகத்தில் இருந்து அக்டோபர் 31 முதல் இ பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்குப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதேபோல் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு நவம்பர் 16 முதல் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.

ஆனால் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே தற்போதுவரை  இ பாஸ் இல்லா பேருந்து சேவை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ஆந்திர முதல்வரின் கோரிக்கையை ஏற்று, வரும் 25-ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும் இடையே இ பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.