டூ வீலர் ஓட்டுனரை காப்பாற்ற முயற்சி செய்த அரசு பேருந்து ஓட்டுநர்! பள்ளத்தில் கவிழந்தது பேருந்து!
டூ வீலர் ஓட்டுனரை காப்பாற்ற முயற்சி செய்த அரசு பேருந்து ஓட்டுநர்! பள்ளத்தில் கவிழந்தது பேருந்து!

கடலூரில் அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
70 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று கோயம்புத்தூரில் இருந்து தள்ளூர் நோக்கி கொண்டிருந்தது. நீலகிரி மாவட்டம் நடுங்கனி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென இருச்சக்கர வாகனம் ஒன்று பேருந்தின் குறுக்கே வந்துள்ளது. நிலைமையை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படாமல் இருக்க பேருந்தை இடது புறம் திருப்பியுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 70 பேரில் 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தை பற்றி தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் 26 பேர் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து ஓட்டியவர் கடலூரை சேர்ந்த ஜெகநாதன் என்பதும் இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் சந்திரமோகன் என்பதும் தெரியவந்துள்ளது.