"நிச்சயமா உன்ன கட்டிக்கிறன்... " மாணவியை ஏமாற்றிய இளைஞர்.!! வீடியோ எடுத்து மிரட்டல்.!! பகீர் பின்னணி.!!



boyfriend-arrested-for-blackmailing-girlfriend-with-int

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, சிலுக்குவார் பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோஸ் மரியா ராகுல் (28). இவர் சென்ற ஆண்டு இன்ஸ்டாகிராம் வழியாக கல்லூரி மாணவிக்கு ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து நட்பு பாராட்டியுள்ளார். கல்லூரி மாணவி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். தாய், தந்தை இல்லாத மாணவி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்கிறேன். நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். மாணவியும், ராகுலும் வேறு வேறு சமூகத்தை  சேர்ந்தவர்கள் என்பதால் நமது காதலுக்கு சம்மதிப்பார்களா.? என மாணவி கேட்டபோது அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என மாணவிக்கு நம்பிக்கை கொடுத்து கடந்த நவம்பர் 20ம் தேதி மாணவியை வைகை அணைக்கு வரவழைத்து பூங்காவை சுற்றி பார்த்த பின் மாணவியை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

tamilnadu
மேலும் அதனை வீடியோ எடுத்து அதை காட்டி அடிக்கடி மாணவியை மிரட்டி பாலியல் இச்சைகளில் ஈடுபட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறிய கோரிக்கையையும் நிராகரித்து மாணவியை ஏமாற்றியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள ஜோஸ் மரியா ராகுல் மற்றும் அவரது பெற்றோர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸார் வாக்குறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: "மொபைல் வாங்கி தரட்டுமா... உன் சைஸ் என்ன"...? 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! தனியார் கல்லூரி பேராசிரியர் கைது.!!