தமிழகம்

பீஸ்ட் படத்தகராறு.. இளைஞரை கொலை செய்த 10 பேர் கும்பல்.. சென்னையில் பேரதிர்ச்சி..!

Summary:

பீஸ்ட் படத்தகராறு.. இளைஞரை கொலை செய்த 10 பேர் கும்பல்.. சென்னையில் பேரதிர்ச்சி..!

பீஸ்ட் படம் பார்க்கும் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அம்பத்தூர், சிவானந்த நகரில் வசித்து வருபவர் லோகேஷ். இவர் தனது தம்பி வெங்கடேஷ் என்பவருடன் அம்பத்தூர்- வானகரம் நெடுஞ்சாலையில் கலைவாணர் நகரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் நேற்று கம்பெனியில் வேலை முடிந்து வெளியே வந்தபோது, 10 பேர் அடங்கிய கும்பல் ஒன்று இவர்களை சரமாரியாக தாக்கியுள்ளது. அப்போது வெங்கடேஷ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், லோகேஷை அந்த கும்பல் பயங்கரமாக பீர் பாட்டிலால் தாக்கி, கத்தியால் வெட்டியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த 10 பேரையும் கைது செய்துள்ளனர். 

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அங்குள்ள திரையரங்கில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் பார்ப்பதற்காக சென்றபோது, இவர்களுக்குள் தகராறு நடந்ததால், முன்விரோதம் காரணமாக லோகேஷை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.


Advertisement