தமிழகம்

அப்பா, அம்மா, காதலி எல்லோரும் என்ன மன்னிச்சிடுங்க..! இளைஞரின் சட்டைப்பையில் இருந்த உருக்கமான கடிதம்.! காரணம் ஆன்லைன் கேம்.!

Summary:

Boy commit suicide who lost money in online gaming

ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி மொத்த பணத்தையும் இழந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் நிதிஷ்குமார். கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துவந்த இவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள டாட்டூ கடை ஒன்றில் வேலைபார்த்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பாத நிதிஷ்குமார் தான் வேலைபார்க்கும் கடையிலையே தங்கியுள்ளார்.

அடுத்தநாள் காலை ஆகியும் நிதிஷ்குமார் வீட்டிற்கு வரவில்லை, போன் செய்தாலும் எடுக்கவில்லை என அவரது பெற்றோர் டாட்டூ நிலைய உரிமையாளருக்கு போன் செய்து மகன் குறித்து விசாரித்துள்ளனர். இதனை அடுத்து கடையின் உரிமையாளர் கடைக்கு சென்று பார்த்தபோது நிதிஷ்குமாரின் இருசக்கர வாகனம் கடைக்கு வெளியே நின்றுள்ளது.

பின்னர் கடையை திறந்து உள்ளே பார்த்தபோது நிதிஷ்குமார் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல்கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிதிஷ்குமாரின் கையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில், ஆன்லைன் கேம் மீதான மோகத்தில் தனது சேமிப்பு பணம் மொத்தத்தையும் இழந்துவிட்டதாகவும், வேலை பார்க்கும் டாட்டூ நிலையத்தின் பணத்தையும் ஆன்லைன் கேமில் வைத்து தோற்றுவிட்டதாகவும், இதனால் தற்கொலை செய்துகொள்வதாகவும் நிதிஷ்குமார் அந்தக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும், தற்கொலை செய்துகொள்வது தவறான முடிவுதான் எனவும், தனது இந்த முடிவிற்காக பெற்றோர், டாட்டூ மைய உரிமையாளர், நண்பர்கள் மற்றும் காதலியிடம் மன்னிப்புகேட்பதாகவும் நிதிஷ்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement