தமிழகம் சமூகம்

மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞர் எரித்து கொலை!

Summary:

boy brutely killed in madurai

மதுரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை அடுத்த பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான இளைஞர் அரவிந்த். இவர் தீவாயியை முன்னிட்டு வருச்சூரைச் சேர்ந்த தன் நெருங்கிய நண்பர் வீட்டுக்கு கறிவிருந்துக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். விருந்தினை முடித்துவிட்டு நண்பர்களுடன் பைக்கில் வீடு திரும்பிய அரவிந்தை மதுரை- சிவகங்கை சாலையில் விளத்தூர் என்னும் இடத்தில 2 சொகுசுக் கார்களில் வந்த மர்மக் கும்பல் நடுரோட்டில் வழிமறித்துள்ளது. 

அவர்களை கண்டு அஞ்சிய அரவிந்த் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் அந்தக் கும்பல் இரும்பு ஆயுதங்களைக் கொண்டு அரவிந்த்தைக் கொடூரமாக வெட்டியும், குத்தியும் உள்ளனர். இதில் அரவிந்த் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து அங்கேயே இறந்துள்ளார். அவர் இறந்தும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் அரவிந்த் உடலை இருசக்கர வாகனத்தின் மீது போட்டு இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து அரவிந்த் மீது ஊற்றி எரித்துள்ளது.

பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கோரா சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியிலும் பீதியிலும் நாலாபுறமும் சிதறி தலைதெறிக்க ஒட்டியுள்ளனர். இதனை பற்றி தகவலறிந்த கருப்பாயூரணி  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

அரவிந்த்தின் சகோதரர் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதனால், இது ஒரு பழி வாங்கும் கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர். பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தி வருகின்றனர்.


Advertisement