தமிழகம்

மனைவி சோறு போடவில்லை! முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கணவர்!

Summary:

Bomb threatened to cm home

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்க போகிறது என்று கூறிவிட்டு அவர் போனை வைத்துவிட்டார்.

இதனையடுத்து சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நிபுணர்கள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் நம்பரை போலீசார் ட்ரேஸ் செய்தபோது அது சேலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் என்பவருடைய செல்போன் நம்பர் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வினோத்கண்ணனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, நான் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். பின்பு தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

மேலும் விசாரணையில் அவரது மனைவி அவருக்கு சாப்பாடு போடவில்லை எனவும் அதனால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைப் பழி வாங்குவதற்காக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வினோத்கண்ணன்கடந்த ஆண்டு இதே போல இரண்டு முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது.


Advertisement