நடிகை குஷ்பூ பாஜகவில் இணைகிறாரா.? பாஜகவுக்கு இழுக்கும் பிரபலங்கள்!

நடிகை குஷ்பூ பாஜகவில் இணைகிறாரா.? பாஜகவுக்கு இழுக்கும் பிரபலங்கள்!


BJP members wishes to kushboo

குஷ்பூவின் 50ஆவது பிறந்த நாளான நேற்று பாஜக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக குஷ்பூவும் பதிலளித்து நன்றி தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாகவே நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது என்பதும் இந்த வதந்திகளுக்கு அவ்வப்போது குஷ்பு மறுப்பு தெரிவித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்தநிலையில், பாஜக முக்கிய பிரமுகரான ஆசிர்வாதம் ஆச்சாரி பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்” என்ற குறளை மேற்கோள் காட்டியுள்ளார். அதற்கு, ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள் வெற்றி என்பதை நினைத்து கூடப் பார்க்க மாட்டார்கள் என்பது பொருளாகும். இவற்றயெல்லாம் பார்க்கும் போது குஷ்பூ பாஜகவில் இணைவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

குஷ்பூவை போன்ற தைரியமான பெண்கள் பாஜகவில் இணைந்தால் மற்ற பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு ஊக்கமாக இருக்கும் என்று சமீபத்தில் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.