400 அடி உயரத்தில் மோதிய பறவை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமான பயணிகள்Bird touched in Air india flight

ஏர் இந்தியா இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும்.  1932 இல் டாட்டா எயர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இப்பொழுது உலகின் 146 விமான நிலையங்களுக்குப் பறப்புக்களை மேற்கொள்கிறது.

சிங்கப்பூரில் இருந்து 230 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறங்கும்போது பறவை மோதியது. இதனால் அதன் சிங்கப்பூர் போக்குவரத்து ரத்தானது. பயணிகள் காயமின்றி தப்பினர். 

சென்னை விமானநிலையத்தில் தரை இறங்க 400 அடி உயரத்தில் சிங்கப்பூர் இருந்து ஏர்இந்தியா விமானம் வந்தபோது அதன் மீது பறவை மோதியது. விமானத்தின் முன்பகுதி சேதமானது, இதனால் தனியாக ஒதுக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். விமானம் மீண்டும் சிங்கப்பூர் செல்லும் போக்குவரத்து ரத்தானது. இதில் செல்ல காத்திருந்த 159 பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.