தமிழகம் சினிமா

ஆயிரத்தில் ஒருவன் பார்ட்- 2..! யார் நடிகர் தெரியுமா.? செல்வராகவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

Summary:

நடிகர் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் தான் "ஆயிரத்தில் ஒருவன்". அந்த படத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் ஆகியோர் நடித்தனர். இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியாகி தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் குவிந்துவந்தது.

2010-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சமீபத்தில் கொரோனா ஊரடங்குக்கு முன்னர் சென்னையில் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனா ஊரடங்கால் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்தநிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது? என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர். இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024இல் வெளியாகும் என்று, அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் செல்வராகவன். செல்வராகவனின் இந்த ட்விட்டை பகிர்ந்த நடிகர் தனுஷ், “ இந்த படம் செல்வராகவனின் கனவு, இதற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம். இளவசரன் மீண்டும் 2024இல் வருவான்” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement