அவினாசி பேருந்து விபத்திற்கு காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் இவர்தான்..! கைது செய்த போலீசார்.!

அவினாசி பேருந்து விபத்திற்கு காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் இவர்தான்..! கைது செய்த போலீசார்.!


Avinashi accident bus accident lorry driver photo leaked

இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்றுகொண்டிருந்த கேரளா அரசு பேருந்து மீது அவினாசி அருகே சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓன்று மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 9 பெண்கள், பேருந்தின் ஓட்டுநர் உட்பட மொத்தம் 20 பேர் பலியான சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.

விபத்து குறித்து நடந்த விசாரணையில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூங்கியதால்தான் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையில் இருந்த தடுப்பு சுவரையும் உடைத்துக்கொண்டு எதிரே வந்த பேருந்தில் மோதியதில், லாரியில் இருந்த 50 டன் எடைகொண்ட கண்டெய்னர் பேருந்தின் ஒரு பகுதியில் விழுந்ததில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் உருகுலைந்தது.

avinashi accident today

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற லாரி ஓட்டுனரை போலீசார் ஈரோடு அருகே கைது செய்துள்ளனர். விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் பெயர் ஹேம்ராஜ் என்றும், அவரது புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.