சிகரெட்டை கையில் வைத்துகொன்டே பெட்ரோலை ஊற்றிய ஆட்டோ டிரைவர்! தீப்பற்றி உடல் கருகிய சோக சம்பவம்!

சிகரெட்டை கையில் வைத்துகொன்டே பெட்ரோலை ஊற்றிய ஆட்டோ டிரைவர்! தீப்பற்றி உடல் கருகிய சோக சம்பவம்!


auto driver fire accident


ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றிய போது சிகரெட் நெருப்பால் உடல் கருகிய டிரைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்க்குடிமகன் என்பவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல காலை அடையாறு காந்தி மண்டபம் அருகே ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரது ஆட்டோ பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றது.

fire

இதனையடுத்து தமிழ்க்குடிமகன் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கேனில் பெட்ரோலை வாங்கி வந்து ஊற்றியுள்ளார். அப்போது தமிழ்க்குடிமகன் கையில் சிகரெட்டை கையில் வைத்துகொன்டே பெட்ரோலை ஊற்றியதாக கூறப்படுகிறது.

அப்பொழுது திடீரென நெருப்பு பெட்ரோலில் விழுந்தது. இதனால் தீப்பிடித்து அவர் உடல் முழுவதும் தீ பரவியது. வலிதாங்கமுடியாமல் அலறித்துடித்த தமிழ்குடிமகனை அப்பகுதி பொதுமக்கள், மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.