உங்கள் பிள்ளைகள் ஆடிட்டர் ஆக வேண்டுமா! தமிழக அரசின் அதிரடி ஆஃபர் திட்டம்

உங்கள் பிள்ளைகள் ஆடிட்டர் ஆக வேண்டுமா! தமிழக அரசின் அதிரடி ஆஃபர் திட்டம்


Auditor coaching by tamilnadu government

நாளுக்கு நாள் புதிய புதிய நிறுவனங்கள் உருவாகி வரும் இந்தியாவில் ஆடிட்டர்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றது. ஆனால் நமது நாட்டில் ஆடிட்டர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 

இதற்கு காரணம் ஆடிட்டருக்கான CA தேர்வுதளை எழுதி தேர்ச்சி பெறுவதில் உள்ள சிக்கல் தான். மற்ற பட்டப்படிப்புகள் போல ஆடிட்டர் தேரிவினை எழுத அரியர் முறைகள் இல்லை. ஒரு முறை ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் மீண்டும் அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டும். இதனால் பல மாணவர்கள் தேர்வு எழுதினாலும் தேர்ச்சி சதவீதம் மிக குறைவு. 

tn goverment

மேலும் தமிழகத்தில் இதற்கான பயிற்சி மையங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது. அதே சமயம் அதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை மாணவர்களுக்கு திறமை இருந்தும் இந்த துறைக்குள் நுழைய முடியவில்லை. 

இந்நிலையில் தமிழக ஏழை மாணவர்களின் ஆடிட்டர் கனவை நிவர்த்தி செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த 500 ஆடிட்டர்கள் மூலம் 70 மையங்களில் +2 முடித்த 2000 மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி வகுப்புகள் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 

உங்கள் பிள்ளைகள் ஆடிட்டர் ஆக விரும்பினால் உங்கள் பகுதியில் உள்ள மையங்களை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் சேர்த்து பயன் பெறுங்கள்.