அத்திவரதர் விஐபி, விவிஐபி தரிசனம் நிறுத்தம்!! அனைவருக்கும் ஒரே தரிசனம்!

அத்திவரதர் விஐபி, விவிஐபி தரிசனம் நிறுத்தம்!! அனைவருக்கும் ஒரே தரிசனம்!


Athivarathar VIP, VVIP Dharisanam stopped


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். 

அந்தவகையில் சயன கோலம் முடிந்து,  நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து  ஆகஸ்டு 16 வரை மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். பின்னர் 17 ம் தேதி ஆக்கிரம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு, 18 ம் தேதி குளத்தில் வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இறுதி நாளான ஆகஸ்டு 16 அன்று காலை 5 மணிக்கே அத்திவரதர் தரிசனம் தொடங்கும் பின்னர்  பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்துமுடித்த பிறகு நடை சாத்தப்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார்.

athivarathar

இந்தநிலையில் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் விஐபி, விவிஐபி தரிசனம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொது தரிசனத்தில் மட்டும் அத்திவரதரை தரிசிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

விஐபி, விவிஐபி பாஸ் வைத்திருக்கும் ஏரளாமானோர் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி மறுப்பக்கப்பட்டுள்ளது. நேரம் முடிந்ததால் விஐபி, விவிஐபி பாஸ்களுடன் ஏராளமானோர் அத்திவரதரை தரிசிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.