அத்திவரதரை தரிசனம் செய்ய காத்திருப்போருக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!athivarathar dharisanam end in august 16

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர்  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக தரிசனம் நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அவரை தரிசனம் செய்ய இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிவருகின்றனர்.

athivarathar

முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இந்நிலையில் வரும் ஆகஸ்டு  17 ம் தேதி வரை நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தருவார் என்றும், 18 ம் தேதி அதிகாலை அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்படும் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் 17 ம் தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 16 ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைகிறது. மேலும் விடிய விடிய கோவிலுக்குள் இருப்பவர்கள் அத்திவரதர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள். பின்னர் 17 ம் தேதி ஆகம விதிகளின்படி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு அத்திவரதர் சிலை குளத்திற்குள் வைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.