தமிழகம் ஆன்மிகம்

அத்திவரதர் தரிசனம் நிறைவடைவதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Summary:

athivarathar dharidsanam

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர்  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக தரிசனம் நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அவரை தரிசனம் செய்ய இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிவருகின்றனர். இந்நிலையில் காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இந்நிலையில் வரும் ஆகஸ்டு  17 ம் தேதி வரை நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தருவார் என்றும், 18 ம் தேதி அதிகாலை அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்படும் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் வருகிற 17-ந் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது. அன்று கிழக்கு ராஜகோபுரம் மதியம் 12 மணியுடன் மூடப்படும். அதன் பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் விஐபி பாஸ் மூலம் முக்கிய நபர்கள் தரிசப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதனையடுத்து வருகிற 16-ந் தேதி காஞ்சீபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும் என தெரிவித்தார்.


Advertisement